'வீடியோதான் இனி எல்லாமே!' - ஃபேஸ்புக்கின் புதிய அறிவிப்புக்கு என்ன காரணம்?

உங்க ஃபேஸ்புக் டைம்லைன் சமீபத்துல கவனிச்சு பாத்திருக்கீங்களா? உங்களுக்கே தெரியாம உங்க நியூஸ் ஃபீட்ல ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கு ஃபேஸ்புக். அது குறித்த தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். அது என்ன தெரியுமா?
இந்த வருடம் அறிவிக்கப்பட்ட காலாண்டு முடிவுகளில் 1.8 பில்லியன் மக்களை ஃபேஸ்புக் சென்றடைந்துள்ளதாகவும், அதில் 1.2 பில்லியன் மக்கள் தினமும் ஃபேஸ்புக் ஆப்ஸை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது கிட்டத்தட்ட இந்திய மக்கள் தொகைக்கு நிகரானது. வளர்ந்து வரும் ஃபேஸ்புக் தன் பயன்பாட்டாளர்கள் டைம்லைனில் சில புதிய உத்திகளை கையாண்டு வருகிறது. வீடியோ ஃபர்ஸ்ட் அணுகுமுறையில் வீடியோ பதிவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இன்னும் சில தினங்களில் வீடியோக்களுக்கான புதிய சேவைகளை வழங்க உள்ளது. ஃபேஸ்புக் தனது புதிய சேவைகளாக ஃபேஸ்புக் லைவ் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் இன்ஸ்டா ஸ்டோரீஸ் வசதியையும் அறிமுகம் செய்தது. அதற்கான பங்களிப்பு அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார். அடுத்த காலாண்டில் இந்த எண்களில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளார். 
வீடியோ ஃபர்ஸ்ட் அறிவிப்பு மூலம் இனி எல்லாமே வீடியோக்களாக இருக்கும். சாதாரண பதிவுகளை கூட மக்கள் வீடியோக்களாக பதிய துவங்குவர் என கூறும் மார்க். இனி எல்லாம் வீடியோ தான் என்ற விஷயத்தை அழுத்தமாக கூறியுள்ளார். 
ஏன் இந்த அறிவிப்பு?
ஃபேஸ்புக் அனைத்து விதங்களிலும் தனக்கு போட்டியான நிறுவனங்களை வீழ்த்தி நம்பர் 1 இடத்தில் உள்ளது. சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் தான் டாப், புகைப்பட பகிர்தலில் இன்ஸ்டாகிராம், உடனடி தகவல் ஆப்ஸில் வாட்ஸ்-அப் என கெத்து காட்டும் ஃபேஸ்புக்கின் ஒரே எட்டாக்கனியாக இருந்தது யூ-ட்யூப் தான்.அந்த வீடியோ தளத்தை வீழ்த்தும் உத்தி தான் இந்த வீடியோ ஃபர்ஸ்ட் அறிவிப்பு எனக்கூறப்படுகிறது. 
ஃபேஸ்புக் லைவ், வீடியோக்களுக்கான புதிய டூல் என தெறி அறிவிப்புகள் வாடிக்கையாளர், விளம்பரதாரர் என அனைவரையும் ஈர்க்கும் வீடியோ விரைவில் பணம் தரும் வர்த்தக தளமாகவும் மாறவுள்ளதாம். மார்க் போட்ட ஸ்கெட்ச் ஏற்கெனவே வேலை செய்ய ஆரம்பித்துவிட்ட நிலையில் விரைவில் வீடியோ தளங்களிலும் ஃபேஸ்புக் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது. 
அப்பறம் என்ன தீபாவளிக்கு வெடி வெடிக்கறது ஆரம்பிச்சு...ஏரியால மழைனு சொல்லுற வரைக்கும் ஸ்டேட்டஸ் போட்ட நம்மூர்காரங்க எல்லாம் இனி ஃபேஸ்புக் லைவ் பண்ணி தெறிக்கவிடுவாங்க...இனி எல்லாமே வீடியோ தான்!
Latest
Previous
Next Post »